“நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல: இயக்குநர் பலராம் கிருஷ்ணா

“நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல: இயக்குநர் பலராம் கிருஷ்ணா
கே ஸ்கொயர் சினிமா சார்பில் பிந்து மாதவி தயாரித்துள்ள படம் நிறம். பலராம் கிருஷ்ணா இய’கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். முகேன், நிதின் சத்யா, பிரீத்தி அஸ்ராணி, தான்யா ஹோப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது இதில் இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியதாவது: “நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

நாயகன் முகன் பேசியதாவது: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. “நிறம்” ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர். இந்த படத்தில் நடிக்க என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார்.

படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு நிறைவேறியது. நிதின் சத்யாவுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என அனைவரும் இந்த படத்திற்காக மனதார உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Comments (0)
Add Comment