திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்து வந்த செல்வராகவன் நண்பர்களின் வற்புறுத்தலால் குஷி ரவியை திருமணம் செய்கிறார். அதன் பிறகு குஷி ரவிதான் அவருக்கு எல்லாமே. நுங்கு வியாபாரம் செய்யும் செல்வராகவன், ஒரு கட்டத்தில் சொந்தமாக நெடுஞ்சாலையில் தாபா ஆரம்பிக்கிறார்.
சந்தோஷமாக செல்லும் அவர் வாழ்க்கை யில் அடுத்தடுத்து பிரச்சினைகள் தொடர்கிறது. ஊருக்கு சாலை வேண்டும் என்ற எம்எல்ஏவிடம் கேட்கப்போய் அவரது மருமகன் மைம்கோபியின் கோபத்துக்கு ஆளாகிறார். அவரே கந்து வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கு பதிலாக பெண்களின் கற்பை வாங்குகிறவர். அப்படி அவர் செல்வராகவனின் மனைவியின் கற்பையும் சூறையாட சாதுவாக இருந்த செல்வராகவன் எப்படி தெய்வமாகிறார் என்பதுதான் படத்தின் கதை.
செல்வராகவன் இதில் கதை நாயகன். அதிக உணர்ச்ர்சிகள் காண்பிக்காமல், ரொம்ப இயல்பான வசனங்கள் பேசி, சாதாரணமாக நடித்துத் இருக்கிறார். அவர் மனைவியாக வரும் பகுஷி ரவி ஆரம்பம் முதல் கடைசிவரை சிறப்பாக நடித்துத் இருக்கிறார். செல்வராகவனுடனான பாசக்காட்ச ள், கடைசியில் கந்து வட்டிட் க்கு எதிராக பொங்கும் காட்சிக ளில் கலக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குபின் குணசித்திர நடிகையாக, செல்வராகவன் அக்காவாக வந்திருக்கிறார் ‘சொல்லாமலே’ கவுசல்யா.
வட்டிட் தொழில் செய்பவராக, வில்லனாக வரும் மைம் கோபி மனதில் நிற்கிறார். செல்வராகவன் மீது பாசமாக இருக்கும் அந்த துறுதுறு சிறுமி கேரக்டரும் மனதில் நிற்கிறது. கிராமத்துக்கு சாலை வசதியில்லை. அதனால் பாதிப்புகள் என்ற கருவும், சாலையில்லாததால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிய வகை யிலும் இயக்குனர் டென்னீஸ் மஞ்சுநாத் கவனம் பெறுகிறார். கந்துவட்டிக் கொடுமை, அதனால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்துத் சொன்னதும் மனதை பிசைகிறது. சென்டிமெண்ட் பட பிரியர்களுக்கு பிடிக்கும் படம்.