‘இதயம் முரளி’ படத்தில் நடித்தவர்கள், முன்னணி நடிகை ஆகிவிட்டார்கள்: இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் மகிழ்ச்சி

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ‘இதயம் முரளி’. ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில் உருவான இந்தப் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.

இந்த நிலையில் பட குழுவினருக்கு நன்றி தெரிவியீகும் நிகழ்வு பாரம்பரியமிக்க விக்டோரியா ஹாலில் நடந்தது. விழாவில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது: வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

அதர்வா முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.

தமன் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.

சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.

எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Comments (0)
Add Comment