திருவள்ளூரை சேர்ந்த பிரபல டாக்டரின் மகன் தருண் விஜய். இவர் அறிமுகமாகும் படம் ‘குற்றம் புதிது’. இதில் அவரது ஜோடியாக சேஷ்மிதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடிக்கிறார்கள்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கரன் கிருபா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நோகா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படம் குறித்து தருண் விஜய் கூறியதாவது: எங்கள் வீட்டில் எல்லோருமே டாக்டர்கள்தான். ஆனால் எனக்கு ஆக்டராக வேண்டும் என்ற ஆசை. முதலில் தயங்கிய குடும்பத்தினர் பின்னர் சம்மதிதம்தார்கள். நிறைய கதைகள் கேட்டோம், கடைசியாக ‘குற்றம் புதிது’ கதை பிடித்திருந்தால் நடிக்க முடிவு செய்தேன்.
இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் என்பதால் அதற்கேற்ப என்னை தயார் செய்தேன். சினிமாவில் நடிப்பதற்காக 3 வருடங்கள் என்னை தயார் செய்தேன். நடனம், சண்டை, நடிப்பு எல்லா பயிற்சிகளையும் முறையாக எடுத்தேன். இந்த படத்தில் நடிப்பதென்று முடிவான பிறகு 3 மாதங்கள் வரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையான பயிற்சி செய்தேன். அதனால் நடிப்பது எளிதாக இருந்தது.
இந்த படத்தின் நாயகன் ஒரு புட் டெலிவரி பாய். ஒரு சிறிய விபத்தில் அவன் மூளையில் பிரச்சினை ஏற்படுகிறது. அது அவனது வாழ்க்கையில் எப்படியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. பரபரப்பான ஆக்ஷன் மற்றும் மென்மையான காதலும் படத்தில் இருக்கிறது. எ ன்றார்.