குற்றம் தவிர்: சிறிய கலைஞர்களின் பெரிய படம்

விஜய், அஜீத், ரஜினி நடிப்பில் ஒரு படம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு படத்தை சிறிய கலைஞர்கள் இணைந்து தந்திருக்கிறார்கள்.
நாயகன் ரிஷி ரித்விக்கை ஒரு போலீசாக பார்க்க வேண்டும் என்பதுதான் அக்கா வினோதினியின் ஒரே ஆசை. இதற்கான முயற்சியில் ரிஷி ரித்விக் இருக்கும்போது, வினோதியின் அக்காவிற்கு தவறான சிகிச்சை அளித்து அவரது சிறுநீரகத்தை திருடி வெளிநாட்டுக்காரருக்கு பொருத்துகிறது ஒரு மோசடி மருத்துவமனை.

தனது போலீஸ் கனவை தூக்கிப்போட்டுவிட்டு அக்காவிற்காக நியாயம் கேட்டு புறப்படுகிறார் ரிஷி. அந்த மருத்துவமனைக்கு பின்னால் இருக்கும் ஒரு பெரிய நெட்ஒர்க்கும், அதன் வேலைகளும் பதற வைக்கும். அதனை நாயகன் ரிஷி எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ரிஷி பற்றி கடைசி நேர திருப்பம் ஒன்றும் உண்டு.

மெடிக்கல் க்ரைம், இன்சூரன்ஸ் மோசடி இரண்டையும் கலந்து ஒரு பரபரப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.கஜேந்திரன். பெரிய ஹீரோக்கள் பாணியில் ஆக்ஷன், ஸ்டைல் என கலக்குகிறார் ரிஷி ரித்விக், நாயகி ஆரத்யாவும் போலீஸ் கான்ஸ்டபிளாகவும், காதலியாகவும் இரு முகம் காட்டி நடித்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் சரவணன், ரவுடியாக வரும் சாய்

தீனா, காமராஜ், சென்ட்ராயன், டாக்டராக வரும் ஆனந்த் பாபு ஆகியோர் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், ரோவின் பாஸ்கரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

விஜய், அஜீத் படம் வரவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இந்த படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

Comments (0)
Add Comment