வசூல் மன்னன்: காமெடி மன்னன்

கிராமத்தைச் சேர்ந்த சரவணன்
(சிறகடிக்க ஆசை டிவி தொடர் புகழ் ஸ்ரீ தேவா), தனது தாய் மாமன் குட்டிப்புலி (சரவண சக்தி)யம் ஊர் முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கி சொகுசாக வாழ்கிறார்கள்.

கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க போலீஸ் பந்தோபஸ்து கேட்டு சரவணன் ஊர் பெரியவர் வேலராமமூர்த்தி மகள் நாயகி நிவேதாவை காதலிக்கிறார். ஆனால் நிவேதாவுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்காக காக்கி சட்டை அணிந்து கொண்டு ‘போலி போலீசாக’ சுற்றிக் கொண்டிருக்கிறார்.

 ஸ்ரீ தேவாவை நிவேதா ஒரு புள்ளியில் சந்திக்க, அவரையும் ஏமாற்றும் ஸ்ரீ தேவாவின் உண்மை முகம் தெரிந்து, தான் போலீஸ் ஆனதும் என்கவுண்டரில் உன்னைத்தான் போடுவேன் என்று சபதம் மேற்கொள்கிறார் நிவேதா.  அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

சின்னத்திரை அனுபவம் இருப்பதால் ஸ்ரீ தேவாவுக்கு நடிப்பது மிகவும் இயல்பாக வருகிறது. அதுவும் ஏமாற்றி லந்து கொடுக்கும் வேலைகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார். சரவண சக்தியின் லந்து பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. ஒரு கட்டத்தில் காவலுக்கு வரும் போலீசின் துப்பாக்கியை பிடுங்கி அவர் பண்ணும் அலப்பறை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

நாயகி நிவேதா பளிச்சென்று இருப்பதோடு, நன்றாக நடிக்கவும் செய்கிறார். போலீஸ் பயிற்சிகளில் டூப் போடாமல் அசத்தி இருக்கிறார்.

பரணியின் இசையில் பாடல்கள் மனதை கவர்கின்றன. ஒளிப்பதிவும் கச்சிதம்.

வசூல் மன்னன்: காமெடி மன்னன்

Comments (0)
Add Comment