படத்தின் நாயகி கவுரி (நிவேதிதா சதீஷி) புதிதாக திருமணமான தனது கணவன் அர்§னிடம் (அதுல்) தான் படிக்கும் காலத்தில் சூரி (சிபிசந்திரன்) என்பவரை காதலித்ததையும் லிவிங் டு கெதராக வாழ்ந்ததையும், பின்னர் பிரிந்ததையும் சொல்லி விடவேண்டும் என்பதற்காக மலைபிரேத்தில் உள்ள தனது கெஸ்ட் அவுசுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த கெஸ்ட் அவுஸ் பாதுகாவலராக இருக்கிறார் நாசர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சூரியும் அந்த கெஸ்ட் அவுசுக்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
பட்டாம்பூச்சியின் ஆயுள் காலம் 2 வாரங்கள்தான் ஆனால் அந்த இரண்டு வாரத்தில் அது எப்படி மகிழ்சியாக வாழ்கிறது. இந்த சமூகத்திற்கு என்ன செய்து விட்டு போகிறது என்பதை உருவகமாகப் பயன்படுத்தி, காதல், காமம் வழியாக யதார்த்த வாழ்க்கை குறித்து பேசுகிறது படம்.
ஒரு வீடு, 4 பிரதான கதாபாத்திரங்களை கொண்டு படம் உருவாகி உள்ளது. பட்டாம்பூச்சி வளர்க்கும் சகாயமாக வரும் நாசர், கெளரியின் அக்கா ரஞ்சனியாக லட்சுமி பிரியா அர்ஜுனாக அதுலும், சூர்யா குமரவேலாக சிபி சந்திரனும் நடிப்பில் கலக்கியுள்ளனர். ஆனால் இந்தப் படத்தின் ஆணிவேர் என்றால் அது கெளரியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ்தான். வெறுக்கும் காதலன், நேசிக்கும் கணவனிடையே கிடந்து தவிக்கும் தவிப்பை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடப்பது ஒவ்வொன்றையும் ஒரு சக்தி உருவா’குகிறது என்பதை நுணுக்கமாக அணுகியுள்ளார் இய’குனர் விஜய் ரகுநாதன். மூன்று கதாபாத்திரங்களை வைத்துக் கண்ணாமூச்சி ஆடியிருப்பதோடு, மிகக் கவனமாகவும் நுணக்கமாகவும் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு முடிவைக் கொடுத்துள்ளார். ஒரு சின்ன விஷயம்தான் ஒரு பெரிய விஷயத்தின் தொடக்க புள்ளியாக அமைகிறது என்பதை திரைக்கதை மூலம் அழகாக சொல்கிறது படம். வேதராமன் சங்கரனின் ஒளிப்பதிவு, வைசாக் சோம்நாத்தின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.