காக்கி சர்க்கஸ்: சிரித்து மகிழ வைக்கும் சீரிஸ்

பொதுவாக போலீஸ் காமெடியன்களாக இருப்பதாகவும்க்து. முதன் முறையாக போலீஸ் சீரியசாகவும், திருடன் காமெடியனாகவும் வந்துள்ள தொடர் இது. ஜீ5 தளம் தற்போது வித்தியாசமான களங்களில் கதைகளை கொண்டு வருகிறது., அதில் ஒன்று இது.

கண்ணகி ஆண்டாள்புரம் கிளைச் சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் முனீஸ்காந்த் (அன்பு செழியன்) கைதிகளை புத்தக வாசிப்பின் மூலம் மாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார். அதற்கு முற்றிலும் மாறாக, அவரது கீழ் பணிபுரியும் அர்ஜீன் அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்று நம்புபவர்.

இப்படியான நிலையில் அந்தச் சிறையில், ஊரின் கண்ணகி சிலை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலிலிருந்து ஆண்டுதோறும் கோயில் விழாவுக்காக சேமிக்கப்படும் பணம் திடீரென காணாமல் போகிறது.

சாதாரண திருட்டாகத் தோன்றிய இந்த சம்பவம், சிறையையும் நகரத்தையும் கலக்கமடையச் செய்கிறது. புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஜெயிலரும், அடிதடி கான்ஸ்டபிளும் திருடனை கண்டுபிடிக்க களமிறங்க, அவர்களை விட அவர்களு’கு டேக்கா கொடுத்து ஆட்டம் காட்டுகிறான் திருடன்.
இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. யு டியூப்பர்களான ரமாவும், சிந்துவும் இதில் சிக்கி’க்கொள்ள சூடுபிடிக்கிறது கதை.

எளிய உண்டியல் திருட்டாகத் தொடங்கும் இந்த விசாரணை காதல், ஏமாற்றம், மறைக்கப்பட்ட ரகசியங்கள் என பரபரப்பும் நகைச்சுவையுமாக தொடர்கிறது இந்த தொடர். ஒவ்வொரு அத்தியாயமும் புதிய பழைய முடிச்சுகளை அவிழ்த்து புதிய முடிச்சுகளை போட்டு கடைசி எபிசோட் வரை சுவாரஸ்யம் குலையாமல் நகர்கிறது
அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் ஆகியோர் காமெடிக்கு கியாரண்டி தருகிறார்கள். கவலை மறந்து சிரித்து மகிழ வைக்கும் சீரிஸ்.

Comments (0)
Add Comment