எங்கள் தங்கம்: ஜொலிப்பு

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்வர்ணாவும்(சமந்தா), டாக்டர் ஹனியும் (திகந்த்) ஹனியின் தங்கை திருமணத்திற்காக கிராமத்திற்கு வருகிறார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டதால் கோபத்தில் இருக்கும் குடும்பத்தை அன்பால் வெல்கிறார் சமந்தா. இந்த நேரத்தில் ஸ்வர்ணாவை தேடி வில்லன் கருணா (குல்ஷன் தேவய்யா) தனது கூட்டத்தோடு வருகிறான். அப்படி என்றால் ஸ்வர்ணா யார்? அவரைத் தேடி கொடூர வில்லன் கருணா ஏன் வரவேண்டும் என்கிற கேள்விகளுக்கு பதில் தருகிறது படம்.

முதல் பாதியில் சமந்தா அப்பாவித்தனமாகச் செய்யும் காமெடிகள் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த சமையல் சமாச்சாரம். இரண்டாம் பாதியில் குல்ஷன் தேவய்யாவின் கதாபாத்திரம் வந்த பிறகு ஆக்ஷன் அதிரடியில் இறங்குகிறார் சமந்தா. முதல்பாதியை குடும்ப கதையாகவும், இரண்டாவது பாதியை ஆக்ஷன் கதையாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி.

ஒரு நடிகையாக சமந்தாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக அமைந்துள்ளது. சமந்தாவின் கணவர். ஹனியாக நடித்த திகந்த், தன் பாத்திரத்தை நேர்த்தியாகச் செய்துள்ளார். கருணாவாக குல்ஷன் தேவய்யா சிறப்பாக நடித்திருக்கிறார். இரண்டாவது மருமகளாக ஸ்ரீமுகிக்கு நல்ல காட்சிகள் அமைந்துள்ளன. சமந்தாவின் தோழியாக வரும் மஞ்சுஷா சிரிக்க வைக்கிறார். மாமியாராக கௌதமி தன் பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். போலீஸாக வரும் சைதன்யா கிருஷ்ணாவும் கவனம் ஈர்க்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு ஒரு பெரிய பலம். குடும்ப காட்சிகளுக்கு கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிரடியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஓம்பிரகாஷ். மொதத்தில் ஒரு காக்டெயில் எண்டர்டெயினராக வந்திருக்கிறது படம்.

Comments (0)
Add Comment