பாலன்: தி பாய்: அம்மா சென்டிமெண்டில் ஒரு திரில் அனுபவம்

தன்னை பாதுகாக நடந்த சண்டையில் ஒரு தவறு நடக்க மகளிர் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார் கதை நாயகி கர்ப்பிணி ஃபர்சானா பலத்திங்கல், அங்கு அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். சிறையில் இருந்து விடுதலையாகும் ஃபர்சானா பலத்திங்கல், யாரையும் நம்பாமல் தனது மகனுடன் வெவ்வேறு பெயர்கள், ஊர்கள், பணிகள் என்று அடையாளத்தை மாற்றி கொண்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில் மகனை பிரியும் சூழல் ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை.

ஒற்றை மனுஷியாக படத்தை தாங்கி பிடிக்கிறார் ஃபர்சானா. தீர்க்கமான அவரது கண்களே பாதி நடிப்பை தந்து விடுகிறது. அவரது மகனாக வரும் ஆதிசேஷன், வளர்ந்த மகனாக வரும் சினான் இருவருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். முகத்தில் அப்பாவித்தனத்தை வைத்துக் கொண்டே இருவரும் செய்யும் காரியங்கள் திகைப்பூட்டுகிறது. டொவினோ தாமஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது காட்சிகள் மாஸ்.

ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு, அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதி லொகேஷன்களை கண்முன் நிறுத்துகிறது. அந்த அழகாக் காட்சிகளை சுஷின் ஷியாம் பின்னணி இசை மிரட்டலாக்குகிறது. அம்மா மகன் பாசக் கதை என்றாலும் அதனை ஒரு கிரைம் திரில்லராக. ஜித்து மாதவன் எழுதியுள்ளார். ’மஞ்சும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கியுள்ளார். கிரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு சரியான விருந்து.

Comments (0)
Add Comment