மக்கள் தரும் பணத்திற்கு உகந்த படத்தை தர வேண்டும்: குஷ்பு

குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தயாரித்துள்ள ‘டபுள் ஆக்குபன்சி’ . அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்க, ரேஷ்மா, விடிவி கணேஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே இந்த படம் வரவேற்பை பெற்றது. படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.

இதில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:’டபுள் ஆக்குபன்சி’ படத்தில் சந்தோஷ் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதில் அனந்திகா உறுதியா இருந்தார். சந்தோஷ் எப்போதும் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வளர்வார்.

நான் எனது மூத்த மகள் திருமணத்தில் பிசியாக இருக்கிறேன். அனந்திகா, அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கிறார், மூத்த மகள் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் வந்தது. இதை மீறி அனந்திகா இந்த படத்தில் வெற்றி பெற்றார். நாம் கொடு’கும் படம் மக்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டும். மக்கள் கொடுக்கிற பணத்திற்கு தகுந்ததாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குடும்பத்தின் பாலிசி என்றார்.

Comments (0)
Add Comment