சிங் கீதம்: சாதனை சங்கீதம்

கமல்ஹாசன் நடித்த ‘ராஜ பார்வை’ ‘பேசும் படம் ‘அபூர்வ சகோதரர்கள் ‘மைக்கேல் மதனகாமராசன் படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். இந்த படங்கள் தனித்துவமானவை, இதில் முக்கியமானது கமல்ஹாசனுடன் இணைந்து இவர் செய்த ‘பேசும் படம்’ என்கிற படம். வசனமே இல்லாமல் உருவான படம்.
இதில் இருந்து மாறுபட்டு வசனத்திற்கு பதிலாக பாடல் மட்டுமே இடம்பெற்றால் அந்தப் படம் எப்படி இருக்கும் என்கிற முயற்சியே இந்தப் படம். 95 வயது முதுமையிலும் இந்தப் படத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

‘குபேர புரம்’ என்கிற ஒரு பழமையான தங்கச் சுரங்கம் இருக்கும் கிராமத்தைக் கதைக் களமாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார். தனது தாத்தா தனக்கு எழுதிவைத்திருக்கும் 100 ஏக்கர் நிலத்தை விற்கு பணமாக கொண்டு செல்ல குபேரபுரத்திற்கு வருகிறார் நாயகன் அயான். இந்த நேரத்தில் ஊரில் இருக்கும் ஒரே ஒரு மரத்தை வெட்டி அதன் கீழ் தங்க சுரங்கம் அமைக்க விரும்புகிறது ஒரு கூட்டம். மரத்தை வெட்டியதால் கோபமடையும் குபேர கடவுள் மக்களின் பேசும் சக்தியை பறித்து பாடும் சக்தியை கொடுத்து விடுகிறார்.

வசனத்திற்கு பதிலாகப் பாடல் என்கிற ஐடியா என்றாலும், அந்த ஐடியாவைத் திரைமொழியில் சாத்தியப்படுத்தியிருக்கும் திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், இசை ஆகிய நான்கும் இயக்குநர் சிங்கீதத்தின் காட்சிக் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கின்றன .
இந்தப் படத்தின் முதன்மை அறிமுக நடிகர்கள் அயான், அகல்யா பம்ரூ தொடங்கி ‘கேமியோ’ கதாபாத்திரங்களில் வரும் மாஸ் நாயன் விஜய் தேவரகொண்டா வரை எல்லோருமே படத்திற்கு பலமாக மாறி இருக்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும், அதையும் தாண்டி ஒரு சாதனை கீதமாக ஒலிக்கிறது இந்த சிங் கீதம்.
=====

Comments (0)
Add Comment