ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து உருவாக்கி உள்ள படம¢ ‘இருமுடிகட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் ரவிதேஜா பேசியதாவது: எனக்கு தமிழ் மொழி மேல பெரிய ஈர்ப்பு உண்டு. ரெண்டு நாளுக்கு முன்னாடி ஒரு நேர்காணலில் கூடச் சொல்லியிருந்தேன். தமிழ் மொழியின் அந்த நையாண்டியான பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
என்னுடைய திரையுலகப் போராட்டங்கள் 90களின் நடுப்பகுதியி சென்னைலதான் தொடங்கியது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்தான் இந்தப் படத்தின் ஆன்மா. எடிட் ரூமில் பின்னணி இசை இல்லாமலேயே இந்தப் படத்தைப் பார்த்தபோதே எனக்குள் ஒரு பெரிய சிலிர்ப்பு ஏற்பட்டது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் பார்த்துட்டு ஆண்கள், சின்னக் குழந்தைகள்னு எல்லோரும் அழுறாங்க. உண்மையிலேயே இது இதயத்தைத் தொடும் ஒரு படம்.
இந்தப் படத்தின் குழந்தை நட்சத்திரம், நட்சத்திராவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக்கிட்டிருக்கு. பிரியா பவானி சங்கர் ரொம்பவே எதார்த்தமான ஒரு மனிதர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். கடைசியா, என் இயக்குநர் சிவா நிர்வானா. ‘படம் கண்டிப்பா ஜெயிக்கப் போகுது, வெற்றி விழால பேசுறேன்’னு தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டு விழால சொன்னேன். இயக்குநர் சிவாவை எனக்கு பிடிக்கும். அது ஏன் என்பதை படத்தின் வெற்றி விழாவில் சொல்கிறேன்.