மொத ராத்திரி: காமெடி பட்டாசு, சென்டிமெண்ட் மத்தாப்பு

ஏற்கெனவே காதலில் தோற்ற ரிஷிகாந்திற்கும், அனிஷ்மாவிற்கும் உறவினர்கள் இணைந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் மொத ராத்திரி ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மொத ராத்திரி சமாச்சாரங்கள் நடந்ததா? இல்லையா என்பது படத்தின் கதை.

ஒரே நாளில் நடக்கும் கதையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. நாயகன் ரிஷிகாந்த் விருப்பமின்மையால் ஏற்படும் சலிப்பு, மனைவியோடு சகஜமாகிக்கொள்ள அவரிடம் நீட்டும் கட்டாயப் புன்முறுவல், மனைவியின் செயலால் உண்டாகும் ஏமாற்றம், குடும்பத்தினர் மீது அள்ளித் தெளிக்கும் கோபம் என உணர்வுகளை கொட்டி நடித்திருக்கிறார்.

படம் முழுக்கப் பேச்சிலும் உடல் மொழியிலும் எப்போதும் பயந்து கொண்டே முத்துச்செல்விக்கு கேரக்டருக்கு உயிரூட்டி இரு’கிறார் உயிர் அனிஷ்மா. மணமேடையில் போடும் குத்தாட்டம், க்ளைமாக்ஸ் அலறல் நடிப்பில் அப்படியொரு வெறித்தனம். இயக்குநர் ராஜா கருப்பசாமி பகவதி பெருமாள், அப்துல் லீ, சேத்தன், ஏ.வெங்கடேஷ், ஷெல்லி கிஷோர், சுமித்ரா தேவி, சங்கீதா பாலன், கார்த்திக், வர்ஷினி கார்மேகம் ஆகியோர் அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இரவு முழுக்க நகரும் கதைக்கு, வெளிச்சமூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி. ஓர் இரவில் நடக்கும் கதையைப் பதற்றமும் காமெடியும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.

சாதிய எண்ணம் தனக்கில்லை எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்பவர்கள்,பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள், சிதைக்கப்படும் அவர்களின் கனவுகள் ஆகியவற்றை காட்சிகளின் வழியே அழுத்தமாகச் சொல்கிறது படம்.

Comments (0)
Add Comment