தி டார்க் ஹெவன்’ வெற்றி: இயக்குநர், ஹீரோவுக்கு தயாரிப்பாளர் தங்கச் சங்கிலி பரிசு

கோதை எண்டர்டெயின்மெண்ட், எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பே’டரி சார்பில் சரண், கோபால் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி டாக் ஹெவன்’. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார், ஜாகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெ’ தோணி தயாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே, இசை: சக்தி பாலாஜி . கடந்த வாரம் வெளியான இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் படத்தில பணியாற்றிவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் படத்தில் நடித்த சித்துவிற்கும், இயக்குனர் பாலாஜிக்கும் தயாரிப்பாளர் தங்க சங்கிலி பரிசளித்தார்.

விழாவில் இயக்குநர் பாலாஜி பேசியதாவது: இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர்,குடும்பத்தினர் , நண்பர்கள் என் என் குழுவினர் உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள்.அதையும் தாண்டி பலரும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள்.

வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து,ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள்.சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார்.

என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி.என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்,ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார்.

அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது.அவர் செய்தார். அவருக்கு நன்றி.

மூன்றாவது நபராக வந்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.இந்தப் படம் வந்தால் மூன்று பேருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நான் அப்போதே சொன்னேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் அதற்குப் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இன்று நடந்திருக்கிறது.

சக்தி பாலாஜியின் இசையைப் பற்றிப் பலரும் பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது.என் இதயத்திலிருந்து சொல்கிறேன் அவர் பெரிய ஆளாக வருவார்.
சகோதரர் ஷரண், கோபால் சார் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்த மேடையும் இல்லை. சிலருக்கு இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம் இருந்தாலும் பலரும் நம்பிக்கையோடு உழைத்தார்கள்.எல்லாருமே வெற்றிக்காகப் பாடுபட்டார்கள்.படம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் போது பழைய சர்ச்சைகளுக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை

இப்போதைய சந்திப்பு வழக்கமான சக்சஸ் மீட் போல் நடைபெறுவதாக யாரும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன்.தயாரிப்பாளர் கோபால் சார் தான் வைக்க வேண்டும் என்றார். இதை ஏற்பாடு செய்தோம் .இது ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு தான்.விரைவில் பெரிய வெற்றி வசூல் விவரங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம்.பத்திரிகையாளர் காட்சியில் நீங்கள் கொடுத்த கைதட்டல் தான் திரையரங்கு வரை நீண்டு சென்றிருக்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி. என்றார்.

Comments (0)
Add Comment