திருநர் மீதான பார்வையை மாற்றியதுதான் டோரதியின் வெற்றி: கார்த்திக் சுப்புராஜ்

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், இயக்குநர்கள் மிஷ்கின், சசி, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது: சினிமா வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி என கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Comments (0)
Add Comment