40 நாட்டு கலைஞர்கள் நடித்துள்ள ‘அமெரிக்கன் ஆவி’

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘அமெரிக்க ஆவி’. தஞ்சை ஜே பி ஆர் என்பவர் இய’கி உள்ளார். நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என சுமார் 200 பேர் புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார்.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா நடைபெற்றது. படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் நெப்போலியன் பேசியதாவது: இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் , டாக்டர்கள் , சயின்டிஸ்ட், புரொபசர்ஸ் என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.

இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில், இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம். சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ்’ படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும். என்றார்.

Comments (0)
Add Comment