நாயகன் ரஜித் மேனனும், நாயகி நக்ஷா சரணும் காதலிக்கிறார்கள். ஜாதி மாறிய காதல் என்பதால் ஊரைவிட்டு ஓடிவந்து மலையில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ரகசியமாக வாழ்கிறார்கள். ஊர் பெரியவர் ஜி.எம்.குமார் அவர்களை தன் பிள்ளைகள் போன்று பாதுகாக்கிறார். திடீரென்று ஒரு பெரிய அசம்மாவிதம் நடக்கிறது. மறு ஜென்மத்தில் இருவரும் வெவ்வேறு பெயர்களில் பிறக்கிறார்கள். இருவருக்குமே ஏதோ ஒரு விதத்தில் அவர்களது முன் ஜென்ம கதை சொல்லப்படுகிறது. முன் ஜென்மத்தில் இழந்ததை இந்த ஜென்மத்தில் பெறுகிறார்களா என்பதுதான் படத்தின் கதை.
பூர்வ ஜென்ம கதை, ஆணவக்கொலை குறித்து நேர்த்தியாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் வீ.ஜே.மீனாட்சி சுந்தரம். ரஜித் மேனன் யதார்த்தமாக நடித்து, முழு படத்தையும் தனது தோளில் சுமந்துள்ளார். தீப்ஷிகா, நக்ஷா சரண் இருவரும் எதங்கள் கேர’டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஜி.எம்.குமார் ஊர் பெரியவராக வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், ராம்ஸ், விஜே பப்பு, கராத்தே ராஜா, ஹலோ கந்தசாமி, எல்.வி.ஆதவன், தேனி முருகன், ‘பருத்திவீரன்’ சுஜாதா ஆகியோரின் இயல்பான நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது.
வத்தலகுண்டு, கொடைக்கானல், பூம்பாறையின் இயற்கை அழகை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது, பிரான்சிஸ் ஏ.ராஜ்குமாரின் கேமரா. மாறா இசையில் பாடல்கள் மனதை கவர்கின்றன.