சினிமாவிற்காக 18 வருடங்கள் உழைத்த ஏகன்: தயாரிப்பாளர் பெருமிதம்

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஹைக்கூ’. சித்துகுமார் இசை அமைத்துள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் அக்டோபர் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் ராஜ்மோகன் பாடல்களை வெளியிட்டார். விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஏகனின் தந்தையுமான டாக்டர் அருளானந்து பேசும்போது, “விஷன் சினிமா ஹவுஸின் மூன்றாவது படம் இது. சினிமாவில் தெரிவதற்காக 18 வருட உழைப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். நன்றாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என ஏகனிடம் சொல்லியிருக்கேன்.

என்னிடம் சொன்னதை அப்படியே யுவராஜ் எடுத்திருக்கிறார். எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது. விஷன் சினிமாவின் அடுத்து ஐந்து படங்களுக்கும் சித்துதான் இசையமைப்பாளர். இசையும் கவிதை போல வந்திருக்கிறது. படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்”. என்றார்.

Comments (0)
Add Comment