கன்னட தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள தமிழ் படம் ‘வவ்வல்ஸ்’. 5 கதைகளை கொண்ட இந்த அந்தாலஜி படத்தை திலிப்குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சரவண சுப்ரமணியம் இசையமைத்துள்ளார். மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது, நிகழ்ச்சியில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் பேசியதாவது:
இயக்குநர் சங்கீத், “இதுதான் எனக்கு முதல் மேடை. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. பொதுவாக, காதலில் ஒரு உணர்வை வைத்துதான் முழு படத்தையும் உருவாக்குவார்கள். ஆனால், நாங்கள் ஐந்து விதமான உணர்வுகளை வைத்து ஒரே படமாக கொடுத்திருக்கிறோம். படத்தில் உள்ள 7 பாடல்களும் நன்றாக வந்துள்ளது. படமும் சிறப்பாக வந்துள்ளது. வரும் 13 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.
இயக்குநர் சந்தோஷ் ரவி, “அறிமுக இயக்குநர்களான எங்களுக்கு யூகி சேது சார் நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என் நடிகர்கள், படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. இந்தப் படத்தில் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
இயக்குநர் ஹேமந்த் குமார், “தயாரிப்பாளர்கள் ராஜூ சார், ஹரி உத்ரா அவர்களுக்கும் நன்றி. சிறப்பாக ஒத்துழைத்த என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் ஜெகன் ராஜேந்திரன், “தயாரிப்பாளர் ராஜூ சாருக்கு நன்றி. என் முதல் படத்தில் நடித்த ராஜ் அய்யப்பா ப்ரோவுக்கு நன்றி. கதையை உள்வாங்கிக் கொண்டு அதை திரையில் அழகாக பிரதிபலித்த அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக்குழுவினருக்கும் நன்றி. மார்ச் 13 அன்று வெளியாகும் இந்தப் படம் நிச்சயம் உங்கள் அனைவரையும் எண்டர்டெயின்மெண்ட் பண்ணும்” என்றார்.