வெஞ்சென்ஸ்: அதிகார வேட்டை

இன்றைய அரசியல் நிலவரங்களை, கலவரங்களை கற்பனை நாட்டில் தாறுமாறாக கிழித்து தொங்கவிடும் படம்.
2042ம் ஆண்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ‘தாய்நாடு’ மாநிலத்தில் கதை நடக்கிறது. பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாதவர் கதையின் நாயகி வேணி (அபர்ணதி). தன் மீது கருணையும் அக்கறையும் கொள்ளாத சமூகத்தின் மீதிருந்த கோபத்தால் வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடவேண்டும் என்று
கடுமையாக உழைத்துப் படித்து ஐஏஎஸ் ஆகி மாவட்ட கலெக்டர் ஆகிறார்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல்வாதிகளைச் சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் வேணி, அதிகாரத்தில் இருக்கும் இல்லாத அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையையும் சம்பாதிக்கிறார்.

அதன் விளைவாக ஆட்சிப்பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இந்நிலையில் தாய் நாடு மாநிலத்துக்குத் தேர்தல் வர, அங்கே தன் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என விரும்பும் பெண் பிரதமர் (மங்கள்), அபர்ணதியின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த வேலையை அவரிடம் கொடுக்கிறார். தாய் நாட்டில் அவரை எதிர்த்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் இப்போது அவர் பேச்சைக் கேட்க கேட்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதன்பிறகு அபர்ணநதியின் ஆட்டம் என்ன என்பதுதான் படத்தின் கதை.

அபர்ணதி இப்படத்தில் நடிக்கவில்லை, வேணியாகவே வாழ்ந்திருக்கிறார். அப்பாவி கேர’டர்களில் நடித்து வந்த அபர்ணநதி இதில் அடப்பாவி ஆட்டம் போடுகிறார். பிரதமராக துடி’கும் ஜான் விஜய், அமைச்சர் பாலாஜியாக வரும் சரவண சுப்பையா, வளர்ப்பு தந்தை காளி வெங்கட், முதலமைச்சராக இளவரசு, முன்னாள் முதல்வர், இந்நாள் ஆளுநராக தாய்நாடு வரும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரின் நடிப்பு கதைக் களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியிருக்கிறது. கதை 2042ல் நடப்பதாக இருந்தாலும், இயக்குநர் ராகுல் அசோக் கையாளும் அரசியல் நிகழ்வுகள் இப்போதே நடந்து கொண்டிருப்பவைதான். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.

Comments (0)
Add Comment