மகுடம்: டபுள் டமாக்கா

விஷால் முதன் முதலாக இயக்கி இருக்கும் படம் மகுடம். முதல் படமே அதிரிபுதிரி ஆட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பி அதற்கேற்ப ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கி இருக்கிறார். ஆந்திர கடற்கரையோரத்து பங்கர தாதா லிங்கா (விஷால்). அவரது மனைவி அஞ்சலி. லிங்கா தாதா என்றாலும் மக்களை பாதிக்கும் விஷயத்தை செய்ய மாட்டார். அவர் கட்டிக்கொடுத்த ஒரு மீன் மார்க்கெட்டின் அடியில் ஒரு புதையல் இருப்பதாக கூறி அரசியல்வாதிகள் தாதாக்களுடன் இணைந்து அதை இடிக்க முயற்சிக்கிறார்கள். இதை தடுக்க நினைக்கும் லிங்கா குடும்பத்தை அழிக்கிறார்கள்.

அதிலிருந்து தப்பும் மகன் கிருபாகரன் (இன்னொரு விஷால்) தாதா வாழ்க்கைக்கு தொடர்பே இல்லாத மெடிக்கல் ரெப்பாக வேலை செய்கிறார்.மனைவி ஜமுனா(துஷாரா விஜயன்), இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கிறார் கிருபா. அப்பாவின் பகைவர்கள் மகனையும் துரத்த,மகன் அப்பா அவதாரத்தை கையில் எடுக்க அதன்பிறகு நடக்கும் ரத்தம் கதம் கச்சாமிதான் படம்.

மூன்று கெட்அப் 2 அப்பா மகன் என்ற இரண்டு கேரக்டர்கள் என்று படம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளார் விஷால். சிறு கதாபாத்திரத்தில் வருபவர்களை கூட ரசிகர்கள் நினைவு வைத்திருக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் விஷால். அப்பா ஜோடி அஞ்சலி, மகன் ஜோடி துஷாரா விஜயன் இருவருமே தங்கள் கடமையை செய்துவிட்டு தியாகி ஆகிறார்கள்.

அப்பா மகன் என இரண்டு வேடம், இரண்டு ஹீரோயின்கள், குடும்ப சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என படத்தை விறுவிறுப்பாக தந்து இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் விஷால். பில்லா, பாட்ஷா, காலா, கபாலி இவற்றின் கலவைதான் மகுடம்.

Comments (0)
Add Comment