99/66: பெண்ணின் ஆவியும், ஆண்களில் சில பாவிகளும்

தமிழ் சினிமாவில் பேய், ஆவி கதைகளுக்கு பஞ்சமே இல்லை என்றாலும் அவ்வப்போது புதிய கதை களத்தில் சுவாரஸ்மான படங்கள் அமைந்து விடுவதுண்டு. அப்படியான ஒரு படம் இது. கதையின் நாயகி ரச்சிதா மகாலட்சுமி – சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரச்சிதாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்.
பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போட, அதில் இருந்து ரச்சிதா தொடர்ந்து தப்பித்து வருகிறார். இதற்கிடையே, திடீரென்று இரவு நேரத்தில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை உணரும் ரச்சிதா, அவரை குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சிக்கும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்த விட்டார் என்பதும், 99 எண் வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வருகிறது.

அப்படியானால் ரச்சிதாவின் கண்களுக்கு மட்டும் தெரியும் ஸ்வேதா யார்?, இறந்த அவர் எதற்காக ரச்சிதாவை சந்திக்கிறார் ?, இரவு நேரங்களில் பயணிக்கும் குடியிருப்பின் சங்க தலைவர் மூர்த்தி யார் ? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திகிலாக கதை சொல்கிறது படம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, ஆவி புகுந்த பெண்ணாவும், கணவனை காதலிக்கும் மனைவியாகவும் அற்புதமாக நடித்துள்ளார். எல்லாவற்றையும் தாண்டி அவரது அழகு கட்டிப்போடுகிறது. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, புத்த மதஈர்ப்பாளராக புதுமையான கேரக்டரில் நடித்துள்ளார். நாயகர்களாக நடித்திருக்கும் சபரி புதுமுகம் என்றாலும் நடிப்பில் குறைவைக்கவில்லை. சிறப்பு தோற்றத்தில் வரும், பவன் கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி, பி.எல்.தேனப்பன் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அமானுஷ்ய பட பிரியர்களுக்கு சரியான விருந்து

Leave A Reply

Your email address will not be published.