மலையாளத்தில் ஹிட்டான ‘ஆஷா’ ஜீ5 தளத்தில் வெளியானது

ஊர்வசி முதன்மை கேரக்டரில் நடித்துள்ள மலையாள படம் ‘ஆஷா’. இதில் அவருடன் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோரும் நடித்துள்ளனர்.
உளவியல் த்ரில்லர் திரைப்படமான இதனை சபர்சனல் இயக்கி உள்ளார். கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மலையாளத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளிவந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் கூறியதாவது: எதிர்பாராத ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஜீமோன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜுடன் மோதலில் சிக்கிக்கொள்கிறார் ஆஷா. தனது மகள்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் விதவையான ஆஷாவின் வாழ்க்கை, கடந்த காலத்தின் அச்சங்களாலும் அனுபவங்களாலும் ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் நிகழும் ஒரு சாதாரண மோதலாகத் தொடங்கும் சம்பவம், படிப்படியாக சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையையும் மாற்றும் தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அவர்களின் முடிவுகளால் ஏற்படும் விளைவுகள் வெளிப்படும்போது, அச்சம், பெருமை, கோபம் மற்றும் தன்னுடைய அன்புக்குரியவர்களைப் பாதுகாக்கும் உள்ளுணர்வு ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.