ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்துள்ள படம் நிறங்கள் மூன்று. துருவங்கள் 16, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி, துஷ்யந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை தொடர்ந்து படித்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் நரேன் பேசியதாவது: பல காரணங்களுக்காக ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன். என்றார்.
சரத்குமார் சார், ரஹ்மான் சார் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது” என்றார்.