பெரும் வரவேற்பை பெற்ற ’ஒரு நொடி’ படத்திற்கு பிறகு அதே அணியினர் உருவாக்கி உள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்’ ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வைட்லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன், ரக்ஷா, தலைவாசல் விஜய், மால்விகா மல்கோத்ரா, நடித்துள்ளனர், சஞ்சய் மாணிக்கம் இசை அமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடும் இந்தப் படம் வருகிற 18 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பல சவாலான அனுபவங்களுடன் இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்தது. 29 இரவுகள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். பட சமயத்தின்போது எனது ஒளிப்பதிவாளர் கேஜி டைபாய்டால் பாதிக்கப்பட்டார். காலையில் மருத்துவமனை கவனிப்பில் மருந்துகள் எடுத்துக் கொண்டு இரவு படப்பிடிப்பிற்காக வந்தார். நான் நினைத்ததை திரையில் கொண்டு வரக் காரணமாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. என்றார்.