‘அட்டக்கத்தி’ மாதிரியான படம் ‘கடுக்கா’: தயாரிப்பாளர் தனஞ்செயன்

மலர் மாரி நிறுவனத்தின் சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரித்துள்ள படம் கடுக்கா. எஸ்.எஸ்.முருகராசு இயக்கி உள்ளார். சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. கெவின் டெகோஸ்டா இசை அமைத்துள்ளார், சதீஸ் குமார் துரை கண்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது: இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் சி.வி.குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன். நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்தபோதே சில திருத்தங்கள் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள்.

அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். என்றார்.

Comments (0)
Add Comment