அந்த 7 நாட்கள்: பேண்டசி காமெடி

நாயகன் ஆதித்யாவிற்கு அஸ்ட்ரோ பிசிக்ஸில் ஆர்வம், டெலஸ்கோப் வழியாக ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு புராதன டெலஸ்கோப் வாங்கி அவர் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் இந்த டெலஸ்கோப்பில் ஒரு மர்மம் இருக்கிறது.அவர் யாரை உற்றுப் பார்க்கிறாரோ அவர்கள் எப்போது சாகப் போகிறார் என்று அவருக்குத் தெரிகிறது. அப்படி அவர் பார்த்துச் சொல்வதெல்லாம் நடக்கிறது. தனது காதலியைப் பார்க்கிறார். அப்போது அவர் ஒரு வாரத்தில் இறப்பார் என்று தோன்றுகிறது. 7 நாட்களில் காதலியை காப்பாற்றுகிறாரா? என்பதுதான் அந்த 7 நாட்களின் கதை.

சூரிய கிரகணத்தை பற்றி பல கட்டுக்கதைகள் இருக்கிறது. அதனை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் ஆதித்யாதன் கண்ணால் பார்க்கும் ஒவ்வொருவரது மரண தருணத்தை அவர் சொல்லும் போதும் அப்படி நடக்கும்போதும் நமக்கும் பதற்றம் பற்றிக் கொள்கிறது.

நாயகனாக ஆதித்யா பாத்திரத்தில் வருகிற அஜித் தேஜ் தோற்றம் நடிப்பு துறுதுறுப்பு துள்ளல் என்று அந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. ஸ்ரீ ஸ்வேதா நாயகியாக நிலா பாத்திரத்தில் வருகிறார்.அமைச்சராக வரும் பாக்யராஜ் சற்றே தனது கலகலப்பை விட்டு விட்டு அரசியல்வாதியாகக் கண்டிப்பு காட்டி நடித்துள்ளார். கதாநாயகனின் தந்தையாக வரும் நமோ நாராயணன்

அசல் அரசியல்வாதியாக வந்து வில்லத்தனம் காட்டுகிறார்.
வெறிநாய்க்கடி எவ்வளவு ஆபத்தானது வெறிநாய்க்கடி பற்றிய அசட்டு தைரியம் தவறானது என்று கூறி விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துகிறார் இயக்குனர் எம்.சுந்தர். லாஜிக் பற்றி கவலைப்படாவிட்டால் பார்த்து ரசிக்கலாம்.

Comments (0)
Add Comment