5 கதைகளை கொண்ட அந்தாலஜி படம். 5 இய’குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். அனைத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை காதல், காதல், காதல்.
ஐந்து கதைகளும் உயிர் தொடர்புடையது என்பதால் ’வெளவல்ஸ்’(உயிரெழுத்துக்கள்) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கற்பனை காட்சியை நிஜமாக்க நினைக்கும் முட்டாள்தனமான காதலால் நடக்கும் கொலை. ஆபத்தான பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான காதலால், தான் பாதிக்கப்படுவதோடு, தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்வது அடுத்த கதை.
காதல் பிரிவால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும் முட்டாள் மனிதர்களின் மனங்களை உணர்வுப்பூர்வமாக காட்டுவது மூன்றாவது கதை.
அன்பு செலுத்துபவர்கள் மீது சந்தேகப்படாமல், எந்தவித யோசனையும், தயக்கமும் இன்றி அவர்களுடனும், அவர்களது காதல் உடனும் பயணிக்க வைப்பது நான்காவது கதை. உதடுகள் சொல்லும் காதல் பொய், உள்ளத்தில் இருக்கும் காதலே மெய், என்பதை எண்ணங்களின் பிரதிபலிப்பான கனவுகள் மூலம் உணர்த்துவது கடைசி கதை.
யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா 5 கதைகளு’கும் உயிரூட்டியவர்கள். முதல் மார்க் பெறுகிறார் யூகி சேது.
30 நிமிடத்திற்குள் தாங்கள் சொல்ல வேண்டிய விசயங்களை மிக சுவாரஸ்யமாகவும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் சொல்லியிருக்கிறார்கள். சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
வித்தியாசமான கதையை நேசிப்பவர்களுக்கு படம் பிடிக்கும்.