‘ரூம்பாய்’ படம் 25 வருட கனவு: இயக்குநர் நெகிழ்ச்சி

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் “ரூம் பாய்”

அறிமுக நடிகர் சி.நிகில் ஹீரோவாக நடிக்க ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படத்தின் இயக்குநர் ஜெகன் ராயன் பேசியதாவது: இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த கனவு இன்று நனவாகியுள்ளது.

சினிமா ஒரு கடல். அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் சிலர். மூழ்கிப் போகிறவர்கள் பலர். இருந்தாலும் எனக்குள் ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. பல வருட போராட்டத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன், ஆனால் அவர் அதற்கு பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார்.

எனக்கு தோல்வி வந்து ரொம்ப பழசு. நிறைய தோல்விகளை சந்தித்த பிறகுதான் இன்றைய நிலையை அடைந்தேன். ஆனால் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று தயாரிப்பாளர் கூறிய வார்த்தைகள் தான் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார், அதனால் தான் என்னால் இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க முடிந்தது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ் குமரன், செயலாளர் கதிரேசன், துணை தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment