ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு விஜய்சேதுபதி பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சார் மற்றும் அவருடைய அணியினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடச் சொன்னார்கள். அது நமக்கெல்லாம் செட் ஆகாது சார். ஏன் வேண்டாம் என்று சொன்னேனென்றால், ஏதாவது பஞ்சாயத்து என்று உட்கார்ந்து, அதில் தீர்ப்பு வழங்கப் போய், பின்னர் நம்முடைய படத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் வேண்டாம் என்று சொன்னேன்.
மேலும், ஒரு பொறுப்பு கொடுத்தால் அதை முழு பொறுப்புடன் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பின்னர் பல விஷயங்கள் உருவாகலாம் என்பதால் நான் அந்த பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் நீங்கள் வெற்றி பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் சார்.
சினிமா ஒரு அற்புதமான தொழில். யாரும் பயப்பட வேண்டாம். இது ஒரு ஆலோசனை அல்ல, என் அனுபவம். ஒரு இயக்குநர் எப்படி படித்து வளர்கிறாரோ, ஒரு நடிகர் எப்படி கற்றுக்கொள்கிறாரோ, அதேபோல் தயாரிப்பாளரும் வியாபாரம் மற்றும் ஸ்கிரிப்ட் ஆகியவற்றை கற்றுக்கொண்டால் மிகவும் நல்லது. நீங்கள் எல்லோரும் இளைஞர்கள், நன்றாக கற்றுக்கொள்ளுங்கள். நிறைய படங்கள் தயாரிக்குங்கள்.
நம்ம ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் ஒரு பள்ளி மாணவன் போலவே நடிக்க முடியும் போல இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் அவர் அதே இளமையோடு தோன்றுகிறார். மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள்.