ஷென் ஸ்டூடியோ தயாரிப்பில், அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள படம்”நீ பேரவர்”. வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பிரதோஷ், ஹரி பாஸ்கர், வித்யா, சினேகா சக்தி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அஸ்வின் ஹேமந்த் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் தனஞ்செயன் பேசியதாவது: சினிமாவை நேசிக்கும் ஒரு மனிதராக, இந்த படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் புகழ் சார் அவர்களின் முயற்சிக்கு நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். பல சவால்களை சந்தித்தும் அவர் தளராமல் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொண்டு வந்திருக்கிறார்.
இயக்குநர் அசோக் மற்றும் முழு குழுவினரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நடிகர்கள் சுதர்ஷன், அர்ச்சனா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், நடனமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளது. இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும்.
இப்படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. நல்ல படமெடுத்தால் ஓடிடி வாங்கிக்கொள்கிறார்கள். அதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ் சினிமாவில் பிரச்சனைகள் இருந்தாலும், நல்ல விஷயங்களும் இருக்கின்றன. இரண்டையும் சமநிலையாக பார்க்க வேண்டும். இன்றைய சினிமா சூழலில் நல்ல படங்களுக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த துறை வளர்ச்சி அடையும். எல்லாரும் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.