பேக்கரி நடத்தும் சுராஜ் வெஞ்சரமுடு, குடும்ப தலைவி தேவதர்ஷினியின் ஒரே மகன் கென். தங்கள் மகன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே பெற்றவர்களின் கனவு. ஆனால் அவரே 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜெஸ்ட் பாஸ் மட்டுமே பெறுகிறார். அம்மாவின் தயவால் மேல் படிப்புக்குச் செல்லும் பிரவீனுக்கு அங்கு அடுத்தடுத்து மூன்று காதல்கள் அரங்கேறுகின்றன. படிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் மூழ்கிக்கிடக்கிறார் கென். இந்தக் காதல்கள் அவருக்குள் எப்படியான தாக்கங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகின்றன என்பதுதான் அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கியிருக்கும் ‘யூத்’ படத்தின் கதை.
பதின்ம வயது உடல்மொழி, சேட்டை, நடனம், காதல் ஆட்டங்கள், அவருக்குள் ஏற்படும் குற்றவுணர்வு மற்றும் மனமாற்றம் என அனைத்தையும் கச்சிதமாக நடிப்பில் புகுத்தி ‘யூத்’ நாயகனாகத் தடம் பதிக்கிறார் கென் கருணாஸ். பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்து கைதட்டல் பெறுகிறார்கள்.
மகனின் கல்விக்கும் எந்தக் குறையும், தடையும் வந்துவிடக் கூடாது என தவி’கும் அப்பாவித் தாயாக தேவதர்ஷினி நெகழ்ச்சியாக நடித்திருக்கிறார். ஸ்ட்ரிக்ட் தந்தையாக வருகிறார் சுராஜ் வெஞ்சராமூடு. படத்தை கலர்ஃபுல் ரங்கோலியாக மாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. ஜி.வி. பிரகாஷ்குமார். பின்னணி இசையிலும் பாடங்களிலும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்.
படிப்பில் கவனம் செலுத்தாமல் ஜாலியாக இருக்க நினைக்கும் ஒருவனுக்குக் காதல்களாலும், குடும்பத்தாலும் கிடைக்கும் அனுபவங்கள் என்னென்ன என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ்.
யூத்துகளிடன் படம் மட்டுமல்ல கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.