கதையை கேட்ட உடனேயே இது வெற்றி பெறும் என்று கணித்தேன்: லவ் ஓ லவ் விழாவில் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி இசை அமைத்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
படம் குறித்து இய’குனர் பேசும்போது “உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் கொண்ட படம்.

சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.
படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது” என்றார்.

விழாவில் இய’குனர் ரவிகுமார் பேசும்போது “இந்த படத்தின் கதையை சொன்னபோது இயக்குனர் சத்தமாக சொன்னார். ஒவ்வொரு கேரக்டரின் வசனத்தை அதே தொணியோடு சொன்னார். இந்த படத்தின் கதையை இப்போது கேட்டாலும் முழு ஸ்கிரிப்டையும் அப்படியே சொல்வார். அந்த வகையில் இந்த கதையை அவர் தனக்குள்ளேயே வைத்திருக்கிறார். அப்போதே இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று முடிவு செய்தேன். நடிகர் பவிஷ் அவரது மாமா தனுசின் தோற்றத்திலும் குரலிலும் இருக்கிறார். அவரைப்போலவே இவரும் வெற்றி பெறுவார்” என்றார்.

Comments (0)
Add Comment