‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் ‘ஜமா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை நாயகனாக நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் தற்போது மீசைய முறுக்கு இரண்டாம் பாகம் படத்திலும் நடித்து வருகிறார்.
ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பரத் சங்கர் இசையமைக்கிறார் ’, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அதற்கு பிந்தைய பணிகள் தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.