ஒன்றும் தெரியாதவரை முதலமைச்சராக்கினால் என்ன நடக்கும்: ‘மக்கள் தலைவா’ பட விழாவில் ராதாரவி பரபரப்பு பேச்சு
வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த ரவிமரியா கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘மக்கள் தலைவா’. அவருடன் ராதாரவி,அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவிமரியாவின் உதவியாளர் ராம்தேவ் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி “இந்தப் படத்தில் ரவிமரியா கதையின் நாயகன் என சொன்னார்கள். கதையின் நாயகன் என்பதைவிட இந்தப் படத்திலேயே இளிச்சவாயன் அவர் தான்.
ஒன்றுமே தெரியாதவர் முதலமைச்சர் ஆகிறார். அவரை நான் எப்படி முதலமைச்சர் ஆக்குகிறேன் என்பது கதை. உண்மையில் இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், தேர்தலுக்கு முன்னால் வந்தாலும் இந்தப் படம் ஓடும், தேர்தலுக்கு பின்னால் வந்தாலும் ஓடும். ஏனென்றால் படத்தில் சில சிக்கலான விஷயங்களை வைத்திருக்கிறார். அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாது. என்றார்.