மம்பட்டியான் ஸ்டார்ஸ் (வெப் சீரிஸ்): கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்க்கத் தகுந்த தொடர்

கிரிக்கெட் விளையாட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் ரத்தத்தோடு கலந்தது. அதனால்தான் அதனை மையப்படுத்தி பல படங்கள், வெப் தொடர்கள் வந்திருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட்டுடன் சென்டிமெண்ட், காமெடி கலந்து வந்துள்ள தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ். ஜீ5 தளத்தில் வெளியாகி உள்ளது.
செவ்வேலி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கிரிக்கெட் ஹீரோவை நேரில் காண வேண்டும் என்ற ஒரே கனவுடன் மேற்கொள்ளும் பயணமே கதையின் மையம். எளிமையான கதைக்களம் என்றாலும், அதை நட்பு, கனவு, இளமைத் துடிப்பு மற்றும் ரசிகர்களின் அதீத அன்பு ஆகியவற்றோடு இணைத்து உருவாகி உள்ளது.

தொடரில் நடித்துள்ள அனைவருமே யதார்த்தமாக நடித்துள்ளனர். சின்னா, ஷகில், சிவா ஆகிய நண்பர்களின் உறவு இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வைபவ் முருகேசன், லாவண்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர். நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் சம்பத் ராம் ஆகியோரின் காட்சிகள் தொடருக்கு கூடுதல் . பலம் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் ஆசைகள், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கிரிக்கெட்டின் மீதான ஈடுபாடு ஆகியவை யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கிராமத்து அமைதியையும், சென்னையின் பரபரப்பையும் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை தொடருக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கிராமத்து சூழல், சென்னை பரபரப்பு, ரசிகர்களின் உணர்வுகள் என அனைத்தையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு கதையின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகின்றன. வெளிநாட்டு விளையாட்டாக இருந்தாலும் அது தமிழ் இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை வெளிப்படுத்திய விதத்தில் கவனம் பெறுகிறது இந்த தொடர். கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல எல்லோரும் பார்க்கத் தகுந்த தொடர்.
====================

Leave A Reply

Your email address will not be published.