‘லவ் ஓ லவ்’வுக்காக இரண்டரை ஆண்டு உழைப்பு: தயாரிப்பாளர் தினேஷ் ராஜா பெருமிதம்

சினிமா மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜா தயாரிக்கும் படம் ‘லவ் ஓ லவ்’. மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி உள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். வொய்ன் பவே, பிரதீப், இணைந்து இசையமைத்துள்ளனர். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அனைவருமே இந்த படத்தில் அறிமுகமாகும் நடிகை நாகதுர்காவை புகழ்ந்தார்கள். காரணம் இவர் தெலுங்கு நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பாடகி. அதேபோல கிராமிய நடனங்களிலும் புகழ்பெற்றவர். இதற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது சமூக வலைத்தள பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். விழாவில் பேசியவர்கள் ‘தமிழ் சினிமாவில் நாகதுர்கா ஒரு ரவுண்டு வருவார். அவரது பாடும் திறமை, ஆடும் திறமையை சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்கள்.

விழாவில் தயாரிப்பாளர் தினேஷ் ராஜா பேசும்போது, “இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார். நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர். இசையமைப்பாளருக்கு இது முதல் படம்.
இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்தசொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும்” என்றார்..

Leave A Reply

Your email address will not be published.