ராம் அண்ட் லீலா: அதையும் தாண்டி புனிதமானது

இது வரை சொல்லப்படாத புதுமையான காதல் என்ற வாக்கியத்தை அடிக்கடி பல பேட்டிகளில் கேட்டிருக்கிறோம். குணா படத்தில் கமல் காதலை அதையும் தாண்டி புனிதமானது என்பார். இந்த இரண்டையும் கலந்து கட்டி அடித்து சொல்லப்படும் காதல் கதை.

திருமண வயதை தாண்டி மணமகள் தேடிக்கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, ரெயில் பயணத்தில் சந்திக்கும் வர்த்திகா மீது காதல் வருகிறது. அவரும் காதலை உடனே ஏற்றுக் கொள்கிறார். இரு வீட்டாரும் திருமணத்திற்கும் சம்மதிக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு பிரச்சினை இருக்கிறது. வர்த்திகா 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார். அது ஏன்? அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.

முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் ரியோ ராஜ். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் நாயகி பாத்திரத்தை சரியாக அணுகியிருக்கிறார் வர்த்திகா. சீரியஸ் அப்பாவாக சேத்தன் ஸ்கோர் செய்ய, அனுபவ நடிப்பில் ஸ்கோர் செய்கிறார், அம்மாவாக வரும் மாளவிகா அவினாஷ்.

வர்த்திகவாவின் அம்மா தீபா மாமா முனிஷ்காந்த், அண்ணன் மா.பா.கா ஆனந்த் நாயகனின் தங்கையாக தாஃபியா அபு, நண்பர் பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் குறையின்றி நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன் படத்தை வண்ணமாக தந்திருக்கிறார். அங்கித் மேனனின் இசை படத்திற்கு தேவையான அளவிற்கு உதவியிருக்கிறது.
திருமணம் ஆகாத ஆணின் போராட்டங்களுக்கு இடையே ஃபேன்டஸி கோணத்தை நுழைத்து காமெடி விருந்து தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.