‘பியார் பிரேமா காதல்க் படத்த்தை இயக்கிய இளன் ஹீரோவாகி இயக்கி இருக்கும் படம். ஆண்டாண்டு காலமாக பெண்கள் மீது திணிக்கப்படும் வீட்டோடு மருகள் கான்செப்டை உடைத்தெறிந்துக்கும் படம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான ‘பர்ப்பிள் பவி’யும் (சான்வி மேக்னா) என்ற பவித்ராவின் வாழ்க்கை காட்டப்படுகிறது. துபாயில் வேலை பார்க்கும் சிவில் இன்ஜினியர் இளனும் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இருவருமே அவரவர் குடும்பத்தின் மீது அதீத பாசம் கொண்டவர்கள்.
திருமணம் முடிந்ததும் மணப்பெண் மாமியார் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டுமா ஏன் மாப்பிள்ளை பெண்ணின் வீட்டுக்குச் செல்லக்கூடாது என்ற கேள்வியை எழுப்பும் மேக்னா. திருமணம் முடிந்த கையோடு தனது வீட்டுக்கு சென்று விடுகிறார். அதோடு நான் வேண்டுமென்றால் என் வீட்டிற்கு வா என்றும் கூறிவிடுகிறார். ஒரு கட்டத்தில் நாயகன் இளன் வீட்டோடு மாப்பிள்ளையாக மேக்னா வீட்டிற்கு சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
திருமணத்திற்குப் பின் பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுவது மட்டுமன்றி, தங்கள் சொந்த அடையாளத்தையும் கனவுகளையும் இழந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் மரபு இந்தியாவில் இப்போதும் அனைத்து சமூகங்களிலும் தொடர்கிறது. இது மாற வேண்டும் என்பதை பொழுதுபோக்கு படமாக தந்திருக்கிறார் இளன்.
நடிகராக இளன் நம்பிக்கை அளிக்கிறார். சான்வி மேக்னா குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘ஆணாதிக்கக் கணவன்’ கேரக்டரில் குணசித்ர நடிகராகி இருக்கிறார் யோகிபாபு. ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்களது அனுபவமிக்க நடிப்பால் ஸ்கோர் செய்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘லவ் இஸ் பியூட்டிஃபுல்’ பாடல் ஈர்க்கிறது. தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு கலர்ஃபுல் விருந்து.
ஒரு நல்ல சமூகக் கருத்தைக் கையில் எடுத்து, அதை ஒரு நல்ல ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார்கள். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.