டாக்சிக்: ரத்தம் தெறிக்கும் யுத்தம்

‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கும் அடுத்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. காரணம், முற்றிலும் கமர்ஷியல் வாடையே இல்லாத ஒரு பாதையில் பயணிக்கும் ஒருவர், யஷ் போன்ற ஒரு பான் இந்தியா நடிகரை வைத்து எந்த மாதிரியான படத்தை தரப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. படத்தின் டீசர், ட்ரெய்லர் கிளப்பிய விவாதங்கள், சர்ச்சைகள் ஆகியவற்றை தற்போது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும் ஒரு பக்கா ஆக்ஷன் பேக்கேஜாக வந்திருக்கிறது டாக்சிக்.

947ம் ஆண்டு, போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் போதைப்பொருள் தொழிலின் முடிசூடா மன்னனாக இரு’கிறார் சல்வடோர். அதே காலகட்டத்தில் துப்பாக்கி மூலம் தங்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்க போராடுகிறார்கள் கங்காவும் (நயன்தாரா) மற்றும் அவரது தம்பி ராயாவும் (யஷ்). சகோதரி மீது அதிக பாசம் வைத்துள்ள ராயா, சல்வடோரின் கும்பலில் ஒரு முக்கிய உறுப்பினராக உருவெடுக்கிறார்.

அவரது மகள் ரெபெக்காவைத் (தாரா சுதாரியா) திருமணம் செய்யக்கூடிய சூழலில், ராயாவின் வாழ்க்கையில் நாடியா (கியாரா அத்வானி) நுழைகிறார். ஒருவரை அடைய வேண்டுமென்றால் மற்றொருவரை இழக்க வேண்டும் என்ற நிலை வரும்போது ராயா என்ன முடிவு எடுக்கிறார். என்பது இந்த காதல் கதையின் கேள்வி, சல்வடோரின் கும்பலை வீழ்த்தி தனது சாம்ராஜ்யத்தை அமைத்தாரா ராயா? இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்கிறது படம்.

படு பயங்கர சண்டை காட்சிகள், சூடாக்கும் படுக்கையறை காட்சிகள் என ரசிகர்களை திருப்பதி படுத்தி அனுப்புகிறது டாக்சிக்.

Leave A Reply

Your email address will not be published.