பலமுறை முயன்றும் காதல் கைகூடாத மயில்சாமியும்(கவின்), காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாத தேவயானியும் (நயன்தாரா) சென்னையில் சந்திக்கிறார்கள். முரண்பட்ட கருத்துகளை கொண்ட இருவரும் எப்படி காதல் விழுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
பல பிரபலமான பாடல்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி பெயர்பெற்ற விஷ்ணு எடவன் இந்த திரைப்படம் மூலம் எழுத்தாளராகவும், இயக்குநராக களமிறங்கியுள்ளார். வழக்கமான திரைக்கதை என்றாலும், ஒருசில புதுமைகளைப் புகுத்தி படத்தை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார். நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுக்கின்றன. இடைவெளி காட்சிக்கு அரங்கம் சிரிப்பலையில் நிறைகிறது.
ஜென் மார்ட்டினின் இசை படத்திற்கு இதம் சேர்த்துள்ளது. பாடல்களும் ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. லியோன் பிரிட்டோ, ராஜேஷ் ஷுக்லாவின் ஒளிப்பதிவு அனைவரையும் அழகாகக் காட்டியது!
பெரிய ஹீரோயின் என்றாலும் கவினுக்கு உரிய இடம் தந்திருக்கிறார் நயன்தாரா. கே.பாக்யராஜும், ராதிகாவும் அனுபவ நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார்கள். மொத்தில் ரத்தகளரியாக இருக்கும் கதைகளுக்கு நடுவில் ஒரு இதமான வருடல் இந்த ஹாய்.