நடுக்கடலில் தினமும் 14 மணி நேர ஷூட்டிங்: மண்டாடியில் மகிமாவின் திகில் அனுபவம்
சூரி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘மண்டாடி’. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை மஹிமா பேசியதாவது:
இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த குழுவும் போட்ட உழைப்பும் ஆர்வமும் ரொம்பப் பெருசு. ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னு தான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னு தான் நான் நெனச்சேன். ஆனா, மதி இந்த படத்தை இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஒரு படைப்பா மாத்தியிருக்கார்ங்குறது நிஜமாவே நம்ப முடியல. அவரோட அந்தப் பார்வை நான் ஆரம்பத்துல எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருசா வந்திருக்கு.
இந்த படத்துல வேலை செஞ்ச குழு சந்திச்ச சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பா நடுக்கடல்ல தினமும் 14 மணி நேரம் ஷூட்டிங் பண்றதுங்குறது சாதாரண விஷயம் கிடையாது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் சாரோட உழைப்பைப் பத்தி சொல்லியே ஆகணும். கடலோட அந்த ஆழமான தன்மையை இவ்ளோ தத்ரூபமா கேமரால கொண்டு வர்றது ஈஸியான காரியமே கிடையாது, ஆனா அதை அவர் மிகச் சிறப்பா செஞ்சிருக்கார்.
அதே மாதிரி பீட்டர் ஹெய்ன் மாஸ்டர்… எனக்குத் தெரிஞ்ச மிகவும் கடின உழைப்பாளியான, தைரியமான ஒரு ஆக்ஷன் டைரக்டர் அவர்தான். இந்த படத்துல அவரோட அசாத்தியமான அர்ப்பணிப்பை நான் பாராட்டுகிறேன். எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ் அவரோட ஷார்ப்பான கட்ஸ் மூலமா படத்தோட அந்த விறுவிறுப்ப கொஞ்சமும் குறையாம கொண்டு போயிருக்கார்.
முக்கியமா சூரி… இந்த படத்துல சூரியோட உழைப்பும், அவரோட அந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷனும் ரொம்பப் பெருசு. அவ்ளோ டயர்டா இருந்தாலும், உடம்புல சின்னச் சின்ன காயங்கள் பட்டாலும் கூட எந்தவொரு ஷாட்டுக்கும் அவர் சமரசம் செய்யவே இல்லை. ஒரு துணை நடிகரா தன் பயணத்தைத் தொடங்கி, இன்னைக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான படத்துல ஒரு ஹீரோவா உயர்ந்திருக்கார்னா, அதுக்கு அவரோட அந்த விடாமுயற்சிதான் காரணம்.
‘மண்டாடி’ படம் கமர்ஷியலா ஒரு மாபெரும் வெற்றியைப் பெறுவதோடு மட்டுமில்லாமல், இந்த படத்துல வேலை செஞ்ச அத்தனை பேரோட அசாதாரண திறமைக்கும் இது ஒரு அடையாளமா இருக்கும்னு நான் உறுதியாக நம்புகிறேன். படம் பெரிய வெற்றியடைய படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!” என்றார்.