ஒன்ஸ்மோர்: காதல், மனைவி, காதலி

வழக்கமான ஒரு காதல் கதையில் சில புதுமையான திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் கலந்து தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். வில்லன் அர்ஜூன் தாஸ் உருக வைக்கும் காதலையும், அதிதி ஷங்கர் அழகையும் கொட்டி ஒன்ஸ் மோர் கேட்க வைக்கிறார்கள்.

கல்லூரியில் ஒன்றாக படித்தவர்களான அர்ஜுன் தாஸும், அதிதி சங்கரும் பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறார்கள். நான் உன்னை காதலிக்கிறேன் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா என்று அதிரடிகாக கேட்கிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் சம்மதிக்கிறார். கல்யாணம் நெருங்கி வரும்போது அர்ஜுன் தாஸ் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த சோனா வந்து நிற்கிறார் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
கடந்த கால காதல் அனுபவங்களால் மனதிற்குள் உண்டான காயம், அதனால் உண்டாகும் சகிப்புத்தன்மை என இறுக்கமாகவே பயணிக்கும் ரகுவாக அர்ஜுன் தாஸ். வேற லெவல். கல்லூரி கால துறுதுறு லவ்வர் பாயாக வேறொரு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். காதலனைத் துரத்தி படபடவெனக் காதல் மொழி பேசும் கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாகப் புகுந்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

வசீகரிக்கும் அழகு, கதக் நடனம், என மற்றொரு நாயகியாக சோனா ஒலிக்கல், ஆட்டோகிராப் கோபிகாவை நினைவூட்டுகிறார். இவர்களைத் தாண்டி ஜென்சன், டிராவிட், ஜகபர் ஆகியோர் அவரவர் பணியை நேர்த்தியாகவே செய்திருக்கிறார்கள்.
இந்த காதல் கதைக்குத் தனித்துவமான வண்ணம் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். ‘வா கண்ணம்மா’, ‘இதயம்’, ‘மீண்டுமா’, ‘மிஸ் ஒருத்தி’, ‘இந்திரா’ என பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்க வைத்திருக்கிறார்ஹேஷாம் அப்துல் வஹாப். அழகான இந்த காதல் கவிதையை ஒன்ஸ் மோர் கேட்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.