சர்தார்-2: ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் சினிமா

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற ‘சர்தா’ர் படத்தின் முந்தைய கதையாக தற்போது வெளிவந்திருக்கிறது அதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தின் அடுத்த பகுதியாகவும் ஹாலிவுட் ஸ்டைலில் நிறைவு பெறுகிறது.

தந்தை சர்தார், மகன் விஜய பிரகாஷ் இருவருமே இந்திய உளவு பிரிவு அதிகாரிகள் (இருவருமே கார்த்தி). சீனா பயோ வாரில் பயன்படுத்துற்கா மக்களை நோயுற்று சாக வைக்கும் கிருமி ஒன்றை கண்டுபிடித்து அதனை பிற நாடுகளுக்கு விற்பனையும் செய்கிறது. அப்படி விமானத்தில் கொண்டு செல்லப்படும் அந்த பயோ வெப்பன் இந்தியாவின் காட்டுப் பகுதிகுள் விழுகிறது. அதனை திருடி உலகையே மிரட்ட நினைக்கிறார் உலகப் பெரும் தாதா எஸ்.ஜே.சூர்யா. அதை தடுக்கவும், அந்த பயோ வெப்பனை அழிக்கவும் வருகிறார் சர்தார். அவருக்கு உதவியாக வந்து சேர்கிறார் விஜய பிரகாஷ். இருவரும் இணைந்து அதனை சாதித்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

விஜய் பிரகாஷ், சர்தார் என இரட்டை வேடங்களில் உடல்மொழி, குரல் என வித்தியாசம் காட்டி படத்தைத் தாங்குகிறார் கார்த்தி. வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா படம் முழுக்க மிரட்டுகிறார். இரண்டு ஹீரோக்களையும் சமாளிக்கிறார். மாளவிகா மோகனன் தனது கடந்தகாலக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். யோகி பாபு, நிழல்கள் ரவியின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளையும், செட்களை அதன் பிரமாண்டம் குறையாமல் காட்சிப்படுத்தவும் உதவியிருக்கிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு கை கொடுக்கிறது.

முதல் பாகத்தைப் போலவே ஒரு சமூகப் பிரச்னையை ஸ்பை த்ரில்லர் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்க். தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அந்த மருந்துகளுக்கு எதிராகப் பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிப் படம் பேசுகிறது.
=======

Leave A Reply

Your email address will not be published.