நிறம்: கடத்தலின் நிறம் என்ன?

மருத்துகல்லூரியில் படிக்கும் கிரிசும், கீர்த்தனாவும் காதலிக்கிறார்கள். கல்லூரியில் நடக்கும் ஒரு பிரச்னைக்குப் பிறகு இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதன் பிறகு கீர்த்தனா காணாமல் போகிறார். காதலன்தான் ஏதோ செய்து விட்டார் என்று கீர்த்தனாவின் குடும்பத்தார் நினைக்கும்போது தன் காதலியை தேடிச் செல்கிறார் கிரிஷ். அதன் பிறகு என்ன நட’கிறது என்பதுதான் கதை.

நாயகன் முகைன் இன்னொரு நாயகி ப்ரீத்தி அஸ்ராணி இருவரும் காதலிக்கிறார்கள். இதுவொரு கதை. ஒரு கட்டத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஒரு மருத்துவமனையிலுள்ள குற்றங்களை கண்டுபிடிக்கிறார். அதனால் அவருக்கு ஒரு ஆபத்து நேர்கிறது. அதிலிருந்து அவரைக் காப்பாற்றப் போராடுகிறார் ஹீரோ. இந்த இரு சம்பவங்களுக்கும் பின்னால் இருப்பது என்ன? என்பதுதான் படத்தின் கதை.

முகைன் இயல்பாக நடித்துள்ளார். நடிகைகளில் ப்ரீத்தி அஸ்ராணி அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார். தான்யா ஹோப் தனக்கு வழங்கப்பட்ட கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். நிதின் சத்யாவின் வில்லத்தனம் வித்தியாசமாக இருக்கிறது. இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்ரேட்மார்க் இசையை கொடுத்துள்ளார். ஒரே நேர்கோட்டில் கதை சொல்லாவிட்டாலும் பல கோடுகளை ஒன்றிணைக்கும் வித்தை திரைக்கதையில் தெரிகிறது. இயக்குநர் பலராம் கிருஷ்ணா ஒரு பரபர திரில்லர் படத்தை தந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.