இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், உருவாகி உள்ள படம் ‘வார் 2’. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம்.
இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை யுனிவர்ஸ் படவரிசையின் ஆறாவது படம் ‘வார்-2’ .
கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அயன் முகர்ஜி இயக்கியுள்ள ‘வார்-2’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட்-14 ம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.