5 வருடமாக உருவான ‘லிங்கம்’

விகடன் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் தயாரிப்பில் லட்சுமி சரவணன் இயக்கத்தில், டோனி பிரிட்டோ இசையில் பஉருவாகி உள்ள தொடர் லிங்கம். கதிர், திவ்யா, பூர்ணிமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொடரின் அறிமுக நிகழ்வில் இயக்குனர் லட்சுமி சரவணகுமார் பேசியதாவது: 2021ல் இந்த சீரியஸை ஆரம்பித்தோம். நான் பயணத்தை விரும்ப கூடியவன். 25 புத்தகங்கள் எழுதியுள்ளேன். வசந்த பாலனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். 5 வருடங்களாக பணியாற்றி இந்த சீரியஸின் கடைசி பணிகள் முடிக்கும் வரை சலிப்பு ஏற்படவில்லை.

திவ்யா நடித்த படத்தை பார்த்து தான் தேர்வு செய்தேன். இதில் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும். வெகுளியான ஒழுக்கத்துடன் இருக்க கூடிய நாயகன் வேண்டும் என்று தேடும் போது கதிர் சரியான தேர்வாக தோன்றியது. இயக்குனரின் கலைஞன் கதிர்.

என் வாழ்க்கையில் வன்முறைகளை தான் அதிகமாக பார்த்திருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். என்னுடைய நண்பன் இல்லையென்றால் நானும் கைதியாக சிறையில் இருந்திருப்பேன். என்னுடைய வாழ்க்கை இயல்பாக மாறும் வரை இது போன்ற படைப்புகள்தான் கொடுக்க முடியும்

Leave A Reply

Your email address will not be published.