விஜய்சேதுபதிக்காக எழுதிய கதை ‘ட்ரையின்’: மிஷ்கின்

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின். படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் நடைபெற்றது. இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மிஷ்கின்

விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது: நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவன் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி.

அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க.

விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது. எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு. நான் நாசர், நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம், நான் பெருமைப்படுகிறேன். தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன்.

விஜய் சேதுபதி பேசியதாவது: இன்னைக்கு எங்களை வாழ்த்த வந்த அத்தனை பேருக்கும் ரொம்ப நன்றி எனக்கு பேசறது நிறைய வார்த்தை இல்ல. இது எல்லாமே எனக்கு கிடைத்த பெருமை இல்லை மிஷ்கின் சாருக்காக தான் நீங்க எல்லாரும் வந்து இருக்கீங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம் தானு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது இவர் கிட்ட ஆடிஷன் போயிருக்கும் நான் ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார் நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுசு சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன் எனக்கு ஒரு வாட்ச் கொடுத்தார். பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன் அதுக்கு அப்புறம்தான் ட்ரெயின் மூவி நடிச்சேன்.

செட் கலகலனு இருக்கும் மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தது அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு. அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் திர்லரா இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.