பருந்து: பெற்றோருக்கு மரியாதை

காதலிப்பவர்கள் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்கிற இந்த காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது. பெற்றவர்களின் சுமரியாதைக்கும், அன்புக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்கிற மெசேஜை எளிய கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அழகுமலை.

பஞ்சாயத்து தலைவர் அழகுமலையின் தம்பி வி.ஆர்.விநாயக், அண்ணனுக்கு எல்லாமே அவர்தான். அதே ஊரில் உள்ள மாரிமுத்துவின் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயித்த நிலையில் இரண்டாவது மகள் தன் காதலுடன் ஓடிப்போகிறார். திருமணத் தேதிக்குள் ஓடிப்போனவர்களை தேடிக் கண்டுபிடித்து தருவதாக அழகுமலையும், வி.ஆர்.விநாயக்கும் வாக்குறுதி கொடுக்கிறார்கள். அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படம் காதலே கூடாது என்று சொல்லவில்லை. அதனால் வி.ஆர்விநாயக் போலீஸ் அதிகாரி ஆதித்யா ஷர்மிசாவை காதலிப்பதாக காட்சிகள் வைத்திருக்கிறார்கள். காதலுக்கான பக்குவம் வேண்டும் என்கிறார்கள். அழகு மலை குணசித்ர நடிப்பில் அசத்துகிறார். வி.ஆர் விநாயக் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார். மாரிமுத்து, இயக்குநர் பேரரசு, மன்சூரலிகான் அமனா, சுமதி ஐஸ்வர்யா தங்கள் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். சென்ட்ராயனும், அப்புகுட்டியும் சிரிக்க வைக்கிறார்கள். நாயகி ஆதித்யா ஷர்மிதா தனது காட்சிகளை வண்ணமாக்கி உள்ளார். இரண்டரை மணி நேர பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் படம்.

Leave A Reply

Your email address will not be published.